ஓம் சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம் !!

நம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் சார்பாக ACMEC டிரஸ்டின் மூலம் வெளியிடப்படும் இந்த சக்தி ஒளி - பொக்கிஷம் வரிசை புத்தகங்கள் நம் சக்தி ஒளி மாத இதழ்களின் வருட வாரியான தொகுப்பு ஆகும். அன்றைய காலத்தில் சக்தி ஒளி இதழில் வெளிவந்த தகவல்கள் அனைத்தையும் அப்படியே அமேசான் கிண்டிலில் கொடுக்க விரும்பி அன்றைய அச்சு கோர்ப்பில் இருந்த இதழ்களின் பொருளடக்கங்களை இப்போதைய நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு ஏற்றார் போல மாற்றி ஆன்லைனில் கொண்டு வந்து கொண்டிருக்கிறோம். இந்த இதழ் 1983ம் வருடத்தின் 12 மாத இதழ்களின் தொகுப்பு ஆகும்.